நாடாளுன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து தமிழக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள்,மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.