Bomb explosion in the ashram; Mystery letter

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேனி அருகே உள்ள வேதபுரீஆசிரமத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு தகவலை அடுத்து ஆசிரமத்தில்வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனைப்புதூர் அருகே இருக்கும் வேதபுரீ ஸ்ரீசுவாமி சித்பவாதந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் அருகே ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயில் ஒன்றும் உள்ளது.அங்கே 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேதம் படித்துவருகிறார்கள். பா.ஜ.க தலைவர்கள் யராவது தேனி மாவட்டத்திற்கு வந்தாலும், இந்த ஆசிரமத்திற்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், ஆசிரமத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கடிதத்தில் இன்னும் 15 நாட்களில் ஆசிரமம் மற்றும் கோயிலில் வெடிகுண்டுவைத்து தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனையடுத்து ஆசிரமம் சார்பில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது.

இதில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. ஆசிரமத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கோயில் மற்றும் ஆசிரமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதம் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து போலீசார்அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். இருந்தாலும் இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.