கோவையில்6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது கோவை கண்காணிப்பு வளையத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisment

ஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

Bomb Experts In Govai

லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கோவைக்கு நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டு நிலையில் இந்த சோதனை தற்போது நீடித்துவருகிறது. தனியார் வணிக வளாகத்தில் போலீசார் உள்ளிட்டோரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment