Advertisment

கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலம்; போலீசார் விசாரணை

Body of young man floating in well; Police investigation

Advertisment

கோவில் திருவிழாவிற்கு சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் பிரசாந்த் (29). கடந்த புதன்கிழமை இரவு அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. ஆனால் அவரது பைக் கோவிலில் நின்றது.

இதுகுறித்து அவரது தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரசாந்தின் செல்போன் கால் பதிவுகள் பட்டியல் பெற்று போலீசார் விசாரணை செய்து வந்தனர். அவர் கடைசியாக பேசிய நபரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் காணாமல் போன இளைஞரை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Advertisment

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள புதர் பகுதிகள், கிணறுகளில் கீரமங்கலம் போலீசார் தலைமைக் காவலர் கணபதி தலைமையில் தேடிவந்தனர். வெள்ளிக்கிழமை இரவு கோவில் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் ஒரு ஆண் சடலம் மற்றும் செருப்புகள் மிதப்பதை அறிந்து கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அது காணாமல் போன பிரசாந்த் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. உள்ளாடை மற்றும் சட்டையுடன் கிடந்த பிரசாந்த்தின் சடலம்பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்குஅனுப்பி வைக்கப்பட்டது.

புதன்கிழமை இரவு காணாமல் போன இளைஞர்கள் 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe