The body of a woman floating in the lake!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ளது கனியாமூர் கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் மிகப்பெரிய பாசன ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் சுமார் 21வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் ஏரியில் மிதந்துள்ளது. அதனை அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சின்னசேலம் காவல்துறைக்கு தகவல் தெரித்துள்ளனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்ணீரில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மிதந்த அந்த இளம் பெண் சின்ன சேலம் தெற்கு தெருவைச் சேர்ந்த யுவராணி(21) என்பதும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சுற்றித்திரிந்து வந்ததாகவும் அப்படிப்பட்டவர். கீழ்ப் பகுதிக்குச் சென்று தவறி விழுந்து இறந்திருக்கலாம். மேலும் அவர் தண்ணீரில் விழுந்து இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment