Advertisment

கோயம்பேட்டில் ஒருவாரத்திற்கு மேல் தேடப்பட்ட பெண், மூட்டையில் சடலமாக மீட்பு!

ஒருவாரமாக தேடப்பட்டுவந்தசென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை சூளைமேட்டில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்துவந்த விருதாச்சலத்தை சேர்ந்த இளம்பெண் வேல்விழிகடந்த ஆறாம் தேதி மயமானர். இதைத்தொடர்ந்து சென்னை வந்த அவருடைய தந்தை ராஜேந்திரன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சூளைமேடுபோலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment

murder

murder

இந்தப் புகாரை அடுத்து, காணாமல் போன பெண்ணைதேடிவந்த போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்காததால் அவர் இறுதியாக யாரிடம் செல்போனில் பேசினார் என கண்டறிந்து அஜித்குமார் என்ற ஒருவரை கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில்தான், அந்த பெண்ணை கொன்றதாக அஜித்குமார் கூறினான்.அவரை கொலை செய்து மூட்டையில் அடைத்து கோயம்பேடு மார்கெட் பகுதியில் குப்பைகள் சேரும் இடத்தில் வீசி எறிந்ததாகவும் கூறினான். இதை அடுத்து அஜித்குமாருடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு வந்த போலீசாரிடம் கொலை செய்து மூட்டைகட்டிவீசப்பட்ட பெண்ணின்சடலத்தை காட்டினான். காய்கறி குப்பைகளோடு குப்பையாகமூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

தற்போது கடந்த ஒரு வாரமாக தேடப்பட்டுவந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த கொலைக்கு காரணம் என்ன, ஏன் இந்த கொலை நடைபெற்றது, காதல் போன்ற விவகாரத்தினால் இந்தக் கொலை நடந்துள்ளதா,இந்த கொலையின்பின்னணி என்ன எனபோலீசார் தீவிரமாக அந்த நபரிடமும், அந்த பெண்ணுடன்தங்கிருந்த தோழிகளிடமும்விசாரித்து வருகின்றனர்.

Chennai College students murder police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe