/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2873.jpg)
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இரண்டுபிரேதப்பரிசோதனை அறிக்கைகளை ஆராயஜிப்மர்மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புதுச்சேரிஜிப்மர்மருத்துவர்கள் மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவில் சித்தார்த்தாஸ்,குசாகுமார்சாஹா, அம்பிகா பிரசாத்பத்ராஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பிரேதப்பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த அறிக்கையை மருத்துவர்கள் குழு ஒரு மாதத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடலை இன்று (23/07/2022) பெற்றுக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 07.00 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்தபோலீஸ்பாதுகாப்புக்கு இடையே, வடக்கு மண்டலஐஜிதேன்மொழி, மத்திய மண்டலஜஜிசந்தோஷ்குமார் முன்னிலையில் மாணவியின்உடலைபெற்றோர் பெற்றுக்கொண்டனர். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சி.வி.கணேசன்மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கள்ளக்குறிச்சி ஆட்சியர்ஷ்ரவன்குமார்,எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்ஆகியோரும்மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடலை, தங்கள் சொந்த ஊரான கடலூர் மாவட்டபெரியநெசலூர்கிராமத்திற்குபெற்றோர் கொண்டு சென்று இன்று மாணவியின் உடலை அடக்கம் செய்ய உள்ளனர். இதன் காரணமாகபெரியநெசலூர்கிராமத்தில் 800க்கும் மேற்பட்டபோலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் இறுதி ஊர்வலத்தில், மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரியநெசலூர்கிராமத்தின் எல்லையில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.