
திருச்சி, செந்தநீர்புரம் மேம்பாலம் அருகே அமைந்துள்ள ரயில்வேக்கு சொந்தமான டீசல் சேமிப்பு கிடங்கு பகுதியைக் கடந்து செல்லும் தண்டவாளம் அருகே ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இன்று (06.07.2021) காலை அந்தப் பகுதியில் தண்டவாளம் சரிபார்த்து பணிக்காக சென்ற ஊழியர், ஆண் பிணம் கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் பொன்மலை சரக காவல்துறையினர், அந்த ஆண் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொன்மலை காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த ஆணின் உடல் குறித்த எந்தவித தகவல்களும் இதுவரை கிடைக்காததால், தற்போது திருச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இந்த நபர் இடம்பெற்றுள்ளாரா என்று தேடும் பணி துவங்கியுள்ளது.