Advertisment

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது...

The body of the late singer SBP is buried at Tiruvallur

Advertisment

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,இன்று பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது மகனும், நடிகருமான எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரது புகழைப் போற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அருகே திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தாமரைப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

spb thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe