தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (21.12.2021) மாலை மறைந்தார். கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிவந்த அவரை, கலைஞர் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக நியமித்துக்கொண்டார். இவரது மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்ணீர்விட்டார். மேலும், நேற்று இரவு மீண்டும் சண்முகநாதன் வீட்டிற்குச் சென்று ஏறக்குறை அரை மணி நேரம் அங்கிருந்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், மறைந்த சண்முகநாதனின் உடல் இன்று பிற்பகல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் வீட்டிலிருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சண்முகநாதன் வீட்டிற்குச் சென்றார். மேலும், அங்கிருந்து காரில் புறப்பட்டு மயிலாப்பூர் மயானத்திற்குச் சென்று சண்முகநாதனின் உடல் தகனத்தின்போதும் அங்கே இருந்தார். அங்கேயும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்ணீர்விட்டார். அப்போது அவருடன் இருந்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு முதலமைச்சரை ஆசுவாசப்படுத்தி தேற்றினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-8_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-6_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-7_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-5_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-4_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-3_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-1_13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th_11.jpg)