k b

திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

Advertisment

கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை உயிர் பிரிந்ததை அடுத்து, அவரது உடல் இரவு 9 மணிக்கு மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்டது.

van

கலைஞர் உடல் கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.