Published on 02/02/2022 | Edited on 02/02/2022

திருச்சி, திருவளர்ச்சோலை சாய்பாபா கோயில் எதிரில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் திருச்சி, ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்று ஸ்ரீரங்கம் போலீசார், அழுகிய நிலையில், கழுத்தோடு, கை, கால்களை இணைத்து கட்டி வைக்கப்பட்டிருந்த அந்தச் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சமபவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இறந்தவர் யார், எப்படி இறந்தார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.