
திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் 400 அடி நீர்வீழ்ச்சி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
அய்யன்கோட்டையை சேர்ந்த 28 வயது இளைஞர் ரத்தினகுமாருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ரத்தினகுமாரை காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் 6 பேர் சேர்ந்து ரத்தினகுமாரை கடத்தி புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் கொலை செய்து வீசியது தெரியவந்தது. அதனைதொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர், பொதுமக்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்தினகுமாரின் உடலை தேடிய நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கும் மீனாட்சி ஊத்து என்ற பகுதிக்கும் இடையே 400 அடி பள்ளத்தாக்கில் ரத்தினகுமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)