Advertisment

சென்னையில் பூட்டிய வீட்டில் முதிய தம்பதிகள் உடல் கண்டெடுப்பு!!

 Body of elderly couple found in locked house in Chennai

சென்னையில் பூட்டிய வீட்டில் முதியவர்கள் இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரு முதிய தம்பதிகள்இறந்து அழுகிய நிலையில், வீட்டுக்குள் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஜீவன்-தீபா ஆகிய முதிய தம்பதிகள்இருவரின் உடலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

குடியிருப்பு பகுதியில்சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்த மக்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.கடந்த வாரம் கரோனாபரிசோதனைக்கு சுகாதாரத்துறை வந்தபோதுஇந்தஇரு தம்பதிகளும் கரோனாபரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்த இருவரும்கரோனாவால் உயிரிழந்தார்களாஎன்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.தற்போது இருவரின் உடலும்சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தபகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai corona virus police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe