The body of a 42-year-old woman found on the beach; A 20-year-old youth was arrested

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.

Advertisment

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி அருகே உள்ளது தேத்தாகுடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய மனைவி துர்கா தேவி (வயது 42). இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பிய சுந்தரமூர்த்தி விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடன் தொகை கட்டிவிட்டு வருவதாக துர்காதேவி வீட்டில் கூறிவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் அன்று மாலை வரை வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் துர்காதேவியை பல இடங்களில் தேடி உள்ளனர்.

Advertisment

அதே வேளையில் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது துர்காதேவி என்பது தெரியவந்தது. அவர் மீது கார் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்பட 10 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை காணவில்லை.

துர்காதேவியின் உடலைக் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குபிரேதப்பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மயக்கவியல் படித்து வந்த 20 வயது இளைஞரான அருண் என்பவரைபிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

The body of a 42-year-old woman found on the beach; A 20-year-old youth was arrested

விசாரணையில் துர்காதேவி மீதுஇளைஞர் காரை ஏற்றிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என நடத்தப்பட்ட விசாரணையில், துர்காதேவிக்கும் இளைஞர் அருணுக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் உல்லாசமாக இருந்தனர். அப்பொழுது துர்காதேவி மாணவரிடத்தில் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். கொடுக்கவில்லை என்றால் முறையற்ற தொடர்பிலிருந்ததை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவி மீது மூன்று முறை காரை ஏற்றிக் கொலைசெய்தது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞர் அருணை போலீசார் கைது செய்துள்ளனர்.