Advertisment

காவல்துறையிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரிய வழக்கு! -பைனான்சியர் ககன் போத்ராவுக்கு அபராதம் விதித்து உத்தரவு!

காவல்துறையிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரிய பைனான்சியர் ககன் போத்ரவுக்கு ரூ.10000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Bodra son issue - High Court order

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ககன் போத்ரா தாக்கல் செய்த மனுவில், தானும், தந்தை முகுந்த்சந்த் போத்ராவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால், நற்பெயருக்கும், தொழிலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். தங்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாகத் தெரிவித்துள்ள அவர், ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி, தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. ககன் போத்ரா மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரரான ககன் போத்ராவுக்கு ரூ.10000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

High Court order police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe