bobby-simha

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மதுஅருந்திய போது நடிகர் பாபி சிம்ஹா செம போதையில் தனது நண்பர்களை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜிகிர்தண்டா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களிலின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாபி சிம்ஹா, இவர் விடுமுறை தினங்களில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் திரைபரபலங்கள் வலம் வருவது வழக்கம்.

Advertisment

இந்நிலையில் நேற்று சென்னை, ஈக்காட்டுத்தாங்களில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு தனது நண்பர்களுடன் பாபி சிம்ஹா சென்றுள்ளார். அங்கு அவர்கள் வழக்கம் போல் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருக்கும்போது, சிம்ஹாவிற்கும் அவரது நண்பரான ஜி.கே.கருணாவிற்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

boby sm

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த வாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து ஒருவக்கொருவர் விடுதியிலேயே தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, அசம்பாவிதத்தை தடுக்க விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தகராறில் ஈடுபட்ட சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்துள்ளனர். அத்துடன் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்கக்கூடாது எனக்கூறி, வழக்கப்பதிவு செய்யாமல் மன்னித்து அனுப்பியுள்ளனர்.