A boat drowned in the Mediterranean; Rescue four fishermen!

நாகையில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதால் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு, இஞ்சின், வலைகள் உள்ளிட்டவை கடலில் மூழ்கியதால் மீனவர்கள் சோகமடைந்துள்ளனர்.

Advertisment

நாகை துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் எழுந்த ராட்சத அலை படகை நிலைகுலையச் செய்துள்ளது. படகின் அடியின் உள்ளே ஓட்டை விழுந்ததால், கடல் நீர் படகில் உள்ளே புகுந்து படகு முழுவதும் நடுக்கடலில் மூழ்கியது.

Advertisment

அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் நான்கு பேரும் கடலில் குதித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கரையை நோக்கி நீந்த தொடங்கினர். அப்போது அவ்வழியே வந்த மற்றொரு படகில் வந்த மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டுக் கரை சேர்த்தனர். இந்த விபத்தில், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் இஞ்சின், வலைகள் நடுக்கடலில் மூழ்கியதால், மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.