தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்ப்ளூகாய்ச்சல் பரவிவருகிறது. இதன்காரணமாகபுதுச்சேரி அரசு, அம்மாநிலத்தில் இந்த மாதம் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும்தனியார்பள்ளியில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்குப்ளூகாய்ச்சல்பரவிவருவதாகசொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்றுசுகாதாரத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வந்தகொரோனாதடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில்தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.ப்ளூகாய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல்காரணமாகபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழ்நிலை தற்போது இல்லை.தொடர்ச்சியாகபள்ளிக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கானபூஸ்டர்இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்தார்.