பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் மருதமுத்து மகன் நாகராஜ் (வயது-33). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழு என்ற வாட்ஸ் அப் குழு அமைத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நண்பர்களின் உதவி மூலம் இரத்தம் கொடை மூலம் உதவி செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் இருமகன்களுடன், ஏழ்மை நிலையில் தற்போது வாடகை வீட்டில் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 20 தினங்களுக்கு முன்பு கவுள்பாளையம் மறைமலை நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வசிக்க வேண்டி குடிசை அமைத்திருந்தனர். இந்த குடிசையை அக்டோபர் 6ஆம் தேதி இரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து கொளுத்தி எரித்து விட்டனர். இதனால் மாற்றுத்திறனாளி குடும்பம் மிகுந்த வேதனையில் உள்ளது. இது தொடர்பாக நாகராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.