Advertisment

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்; எம்எல்ஏ தலைமையில் ரத்த தானம்!

Blood donation lead by MLA or Minister Udhayanidhi  birthday in Cuddalore

Advertisment

கடலூரில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இளைஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.இதில் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், கர்ணன், சரத் தினகரன், மகேஸ்வரி, விஜயகுமார், பாருக் அலி, கீர்த்தனா, ஆறுமுகம், ராதிகா, பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe