/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovai blood.jpg)
தனது மகளை விட்டு பிரிந்த மருமகன் மீண்டும், தற்போது வந்து தொந்தரவு செய்வதாக கூறி, மருமகனை பொதுமக்கள் மத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட மாமனார் அடித்து துவைத்தார்.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் சாந்தினி. கடந்த 10 வருடத்திற்கு முன்பு பழனிசாமி என்பவரை திருமணம் செய்து உள்ளார். ஆனால் பழனிசாமி, மனைவியையும், 3 மாதக் குழந்தையை விட்டு விட்டு சென்று உள்ளார். இதனை அடுத்து சாந்தினி காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென பழனிசாமி அந்த கடைக்கு வந்து தகராறு செய்து உள்ளார். இதை பார்த்துக் கொண்டு இருந்த சாந்தினியின் அப்பா, பழனிசாமியை அடித்து உதைத்து கை கால்களை கட்டி வைத்து உள்ளார். பல வருடங்களாக மனைவியை கவனிக்காமல் இருந்த பழனிச்சாமி தற்போது , தொடர்ந்து தனது மகளை தொந்தரவு செய்வதாகவும், இதனால் அடித்ததாக அவரது மாமனார் தெரிவித்து உள்ளார். ஆனால் தங்களை மாமனார் வாழவிடாமல் தடுப்பதாக பழனிச்சாமி கூறினார். பொதுமக்கள் மத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட மாமனார், மருமகனை அடித்ததை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் பழனிச்சாமியிடமும் , தர்மராஜ் மற்றும் சாந்தினியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)