Advertisment

கடலூர்- ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்

k;

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் கே.ஆர்.தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் ஜெயச்சந்திரா ராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Advertisment

கூட்டத்தில், "நியாயவிலை கடைகளுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் சரியான எடையில் தரமானதாக கொண்டுவர வேண்டும், ஏற்றுகூலி இறக்குகூலி கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும், அனைத்து நியாயவிலை கடைகளிலும் 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு எடையாளரை நியமிக்க வேண்டும், இ.பி.எப், எல்.ஐ.சி பிடித்தம் செய்யப்படும் பணத்தை முறையாக வங்கிகளில் கட்டவில்லை, அதை முறையாக கட்ட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளரின் நிர்வாகத் திறமையை கண்டித்தும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்ற 15ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisment

மாவட்ட வட்ட நிர்வாகிகள் சரவணன், தேவராஜ், முஸ்தபா, கலைச்செல்வன், சேதுராமன், பாலு, செல்வராஜ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe