Advertisment

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மஜக முற்றுகை போராட்டம்!

cjvb

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று செப்டம்பர் 10 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் தடையை மீறி நடைபெற்றது.

Advertisment

பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு துணைத்தலைவர் S.S.பாலாஜி எம்எல்ஏ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ராம்முத்துக்குமார், சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisment

முற்றுகையை கொடி அசைத்து வீரத்தாய் அற்புதம்மாள் அவர்கள் தொடங்கி வைத்தார். முற்றுகையில் திரளான பெண்கள் கைக்குழந்தைகளுடன் அணி வகுத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் மதியம் 3 மணி முதல் குழுமத் தொடங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள் என நூற்றுக்கணக்காண வாகனங்களில் வந்தவர்கள் போராட்ட களத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியப்படி அணிவகுத்தனர்.

protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe