Advertisment

வாலிபால் விளையாடிய பார்வையற்றோர்!

ஈரோடு ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், உணர்வுகள் அமைப்பு மற்றும் பார்வையற்றோர் நற்பணி இயக்கம் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி இன்று ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

Advertisment

vollyball

இப்போட்டிகளை கல்லூரியின் சேர்மன் மக்கள் ஜி.ராஜன் துவக்கிவைத்தார். இந்த போட்டிகளில் சென்னை, கரூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், ஊட்டி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பார்வையற்றோர் கலந்துகொண்டு விளையாடினர். முடிவில் இறுதிப் போட்டியில் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த வீரர்களும் , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வீரர்களும் போட்டியிட்டார்கள். இதில் ஈரோடு மாவட்டம் 3/2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை மக்கள் ராஜன் வழங்கினார்.

Advertisment

sports volleyball
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe