மதுரை (வடக்கு) அரிமா சங்கக் கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரேயுள்ள அரிமா ராமசுப்பு மன்றத்தில் நடந்தது. இதில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு வைபவம் நடந்தது.
இதன்படி தலைவராக அரிமா கே.வி.கஸ்தூரிரங்கனும், செயலாளராக அரிமா எஸ். மகாலிங்கமும், பொருளாளராக அரிமா எஸ்.என்.கார்த்திகேயனும், துணைத் தலைவர்களாக அரிமா.எம்.ராதா ருக்மணியும், அரிமா விமலா கார்த்திகேயனும் சங்க ஒருங்கிணைப்பாலராக கலைச்செல்வி முத்துவிஜயனும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் பார்வையற்ற தம்பதியருக்கு சீர் வரிசைகளோடு திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
அரிமா சங்கப் பிரமுகர்களான அரிமா ஆர்.குருசாமி, அரிமா ஆர்.ராமசாமி, அரிமா ராஜவேல், அரிமா நிர்மலா சந்திர மஹேந்திர மெளலி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பல்வேறு நல உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.