Advertisment

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை... இன்னும் இரண்டு மணிநேரம் நீடிக்க வாய்ப்பு!

Bleaching rain in Chennai ... likely to last for two more hours!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் இன்னும் 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் தற்பொழுது வரை எம்.சி.ஆர் நகரில் அதிகபட்சமாக 9 செண்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 4 செண்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கம்- 3 செண்டிமீட்டர், கடலூர் சிதம்பரத்தில் 3 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Advertisment

தொடர் மழை காரணமாக சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் சாலைகளில் தெருக்களில் மழைநீர் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாகத் தலைமைச் செயலகத்தில் மழைநீர் புகுந்துள்ளது. ஆயிரம் விளக்கு, எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிண்டியிலும் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது.

Advertisment

rain weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe