Advertisment

ஸ்ரீவைகுண்டத்தில் குண்டு வீச்சு - ஒருவர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் தனது பொலிரோ காரில் வந்து கொண்டிருந்தார். அவரது கார் ஸ்ரீவைகுண்டம் பெரிய கோவிலை அடுத்த மேல பிள்ளையார்கோவில் சமீபம் வரும்போது அவரது வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் குண்டு வீசினர்.

Advertisment

bomb

இதில் காயமடைந்த ஜெயராமனை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராமனுக்கும் மற்றவர்களுக்கும் நில பிரச்சனை தொடர்பாக வழக்கு இருக்கிறது. இந்த பிரச்சனை தொடர்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தும் போலீசார், குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisment

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கின்ற ஸ்ரீவைகுண்டம் நகரில் இந்த சம்பவம் நடந்ததால் அந்தப் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

bomb threat police bomb
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe