Skip to main content

 திருவாரூர் வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்; பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
ban

 

 ஹைட்ரோகார்பன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதியளித்த மத்திய அரசிற்கு எதிர்ப்பு  தெரிவித்து 3 ம் தேதி திருவாரூர் வருகை தரும் தமிழக ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன்  தெரிவித்துள்ளார்.

 

திருவாருரில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் அவரசர கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு  இன்று கையெழுத்திடுவதற்கு விவசாயிகள் சார்பில்  கண்டனமும் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது.

 

கூட்டத்தின் முடிவில் அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘’மத்திய அரசு ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும். இந்த திட்டங்களை செயல்படுத்த கூடாது. எனவே விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் வருகிற அக்டோபர் 3ஆம்  தேதி திருவாரூருக்கு வருகை தரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு  தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போரட்டத்தில் விவசாயிகள் ஈடுபடவுள்ளோம்.

 

தமிழக அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 70 ரூபாயும், சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு 50 ரூபாயும் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தமிழக அரசு நெல்லின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஓன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தி வழங்கினால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பன்வாரிலால் புரோஹித் உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

ுபர

 

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கே.பி. முனுசாமி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், இந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக என்.ஆர். ரவி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் ஆளுநராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கூவத்தை மீட்கும் பணி..! குப்பையை அகற்றி துவங்கிய ஆளுநர்..!(படங்கள்)

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

 

சென்னையின் துயரமாக கருதப்படும் கூவம் நதியை தூய்மைபடுத்த தமிழக அரசும் தன்னார்வலர்களும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், எந்த முயற்சியும் முழுமையாக கைக்கொடுக்கவில்லை. அந்தவகையில் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) சார்பில் மக்களிடையே நீர்நிலைகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கூவத்தை தூய்மைபடுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதம் இருமுறை என்பதாக தொடர்ந்து கூவம் கரைகளில் இந்த தூய்மைபடுத்தும் நிகழ்வு நடக்கவுள்ளது. அதன் முதன் நாளான இன்று சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைக்கப்பட்டிருந்தார். 
 

நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு கூவம் கரையில் குப்பைகளை பொறுக்கி தூய்மைபடுத்தும் பணியை துவங்கி வைத்தார்.