Skip to main content

திடீரென எழுந்த கரும்புகை - எஸ்.வி.சேகர் ஓட்டம்

Published on 07/09/2018 | Edited on 08/09/2018
s. ve. shekher


விழா ஒன்றில் பேசிக்கொண்டிந்தபோது ஆம்பிளிபயர் வெடித்து கரும்புகை வந்ததால் பேசிக்கொண்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட மேடையில் இருந்தவர்கள் அலறிஅடித்து ஓடினர். 
 

சென்னை எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைப்பெற்றது. நடிகர் எஸ்.வி.சேகர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 
 

அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்தபடியே மாணவர்களிடையே எஸ்.வி.சேகர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடை அருகே இருந்த ஆம்பிளிபயர் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் விழாவில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஆம்பிளிபயர் வெடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு மின்சாரமும் தடைபட்டது.
 

அப்போது எஸ்.வி.சேகர் உள்பட மேடையில் இருந்த பிரமுகர்களும், விழாவை பார்த்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே மைக், செட் அமைத்த தொழிலாளர்கள் அந்த ஆம்பிளிபயரை அகற்றினர். பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை கொடுத்தனர். இதனையடுத்து மீண்டும் விழா தொடங்கியது. பேச்சை பாதியில் விட்ட நடிகர் எஸ்.வி.சேகர் தொடர்ந்து பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான் செய்வது மோடிக்கு தெரியும்... போனில் நான் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறும்... எஸ்.வி.சேகர்

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

svs

 

 

அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கட்சியின் பெயரையும், கொடியையும் மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். எஸ்.வி.சேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். பிஜேபி கட்சி எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை. ஆகவே நாம் எஸ்.வி. சேகர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது என்றார் அமைச்சர் காமராஜ்.

 

எஸ்.வி.சேகர் பேச்சுக்கு பலர் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், மீண்டும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "நான் பயப்படுபவன் கிடையாது. என்னை எல்லோருமே சொல்வார்கள், நீ ஒரு பிராமண சத்திரியன் என்று. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஜான் பாண்டியனில் இருந்து எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனையென்றால் ஓடிவந்து குரல் கொடுக்கக்கூடியவர் மீனவ சங்கத் தலைவர் அன்பழகன். அதுபோல நிறைய பேர் இருக்கிறார்கள். 

 

பாஜக பதவிக் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே கிடையாது. என்னைப் பொறுத்தவரை மோடி அரசாங்கம் நடைபெற ராமருக்கு அனில் மாதிரி உதவி செய்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும். 

 

நீங்கள் ஏன் பிரச்சாரத்திற்கு வரவில்லை என சில பேர் கேட்கிறார்கள். பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் வரப்போகிறேன், கூப்பிடாமல் எப்படி போவது. அடையாளமே தெரியாத யாரோ ஜீப்பில் ஏறி பேசிக்கொண்டு போவார்கள். அடையாளம் தெரிந்த நான் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு பின்னால ஓட முடியுமா? போனில் நான் சொன்னாலே ஒரு 5 ஆயிரம் ஓட்டு மாறிப்போகக்கூடிய அளவுக்கு செல்வாக்கு எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும். ஆகவே எந்த இடத்தில் எங்க பேசனுமா அங்க பேசுவேன். 

 

எல்லாவற்றும் மேல் நூறு சதவீதம் நான் கடவுளை நம்புகிறேன். நான் பயப்படுபவன் அல்ல. பயந்தால் பொதுவாழ்க்கைக்கு வர முடியாது. என் வீடு ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பெட்ரோல் பாம். மூன்று முறை கல்லால் அடித்து தாக்கினார்கள். பயந்திருந்தால் முதல் தடவையே விட்டுட்டு போயிருப்பேன். நான் யார் என்பது எனக்கு தெரியும். சோ என்னை மோடியிடம் அறிமுகம் செய்து வைத்தார். மோடிதான் என்னை பாஜகவில் சேர சொன்னார். குஜராத் மாநிலம் வருமாறு என்னை அழைத்தார். நான் சென்று வந்தேன். எனது நாடகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி... எஸ்.வி.சேகர் ஆரூடம்

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

 

பா.ஜனதா 300 இடங்களில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

 

S. Ve. Shekher



திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவலை பரப்புகிறது. ஒவ்வொரு ஊடகமும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்துதான் உள்ளது. மக்கள் தங்களது நிலைப்பாட்டை ஊடகத்தினரிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
 

எனவே, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. தற்போதைய தேர்தலில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை அரசியல் கட்சியினர் பேசி வருகிறார்கள். சில ஊடகங்கள் மோடியை திருடன் என்று சொல்வதை நாகரிகம் போலவும், காங்கிரசை மோடி குற்றஞ்சாட்டினால் அநாகரிகம் போலவும் கருத்துகள் பரிமாறப்படுகிறது.
 

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் கட்சியை விட, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக வாக்குகளை பெறும். கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெறுவார்கள். அடுத்து வர உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல்ஹாசன் கட்சி இருக் கும். 


தமிழ்நாட்டில் 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதனால், பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. ரஜினிகாந்த் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும்போது நிச்சயம் அவரும் அரசியலுக்கு வருவார். அவரது தலைமை கூட தமிழகத்தில் வரலாம். இவ்வாறு தெரிவித்தார்.