Advertisment

பூங்காவில் நுழைந்த கருஞ்சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்

A black panther entered the park; Exciting CCTV footage

நீலகிரி மாவட்டத்தில் பூங்கா ஒன்றுக்குள் கருஞ்சிறுத்தைப்புகுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுவாயில் பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவியது தெரிய வந்தது. இந்தக் காட்சிகள் பூங்கா வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அந்தப் பகுதியில் உலாவி வரும் கருஞ்சிறுத்தையைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருஞ்சிறுத்தை உலாவுவது தொடர்பான செய்திகள் அந்தப்பகுதிமக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

Advertisment
park nilgiris leopard
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe