/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download_47.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருந்தவர்கள் பட்டியலை வெளியிட ஸ்விஸ் வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தற்போது இரண்டு நிறுவன வங்கி கணக்குகளின் விவரங்கள்வெளியாகியுள்ளது. கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள அந்த இரண்டு இந்திய நிறுவனங்களின் விவரம் தர ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஜியோடெஸிக்மற்றும் ஆதிஎன்டர்ப்ரைசஸ்நிறுவனங்கள் கருப்பு பண பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
ஜியோடெஸிக்நிறுவனத்தை சேர்ந்த மூன்று பேருடைய சுவிஸ்வங்கி கணக்கில் பணம் பதுக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பங்கஜ்குமார், பிரசாந்த், கிரண் குல்கர்னிஆகிய இந்த மூவரின்வங்கிக் கணக்கில் கருப்பு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கூறப்பட்ட நிலையில், அவர்களுடைய விவரங்களையும்வெளியிட்டுள்ளது சுவிஸ் வங்கி.
இப்படி வெளியிடப்பட்டுள்ள மூவரின் விவரங்களின் அடிப்படையில்ஜியோடெஸிக்தலைவர் பங்கஜ்குமார், மேலாண் இயக்குனர் கிரண் குல்கர்னி, இயக்குனர் பிரசாந்த் ஆவர்.
அதேபோல் இரண்டாவது நிறுவனமாகதமிழகத்தைச் சேர்ந்த ஆதிஎன்டர்ப்ரைசஸ் என்ற ரியல் எஸ்டேட், உள்ளிட்ட தொழில் செய்து வரும் நிறுவனத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் உள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)