Advertisment

விசிக மாநாட்டு விளம்பரம் மீது கருப்பு மை வீச்சு; போலீசார் தீவிர விசாரணை 

Black ink on Vck conference advertisement in Vellore

Advertisment

டிசம்பர் 23 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் "வெல்லும் ஜனநாயகம்" என்ற மாநாட்டிற்காக வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டான்,காட்பாடி, அணைக்கட்டு உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாட்டு விளம்பரம் வரையப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் அடுத்த அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் என்ற பகுதியில் சாலையோரம் உள்ள தடுப்பு சுவற்றில் எழுதப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயர் கொண்ட மாநாட்டு விளம்பரம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு தார் ஊற்றி உள்ளனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு திரண்டனர். இதனால்காவல் துறை குவிக்கப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வேலூர் கிராமகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே போல் துத்திப்பட்டு பகுதியில் எழுதப்பட்டிருந்த விளம்பர சுவர் மீதும் கருப்பு மை வீசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

police vck Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe