silambarasan

இந்திய வரைபடத்தில் தமிழகத்தை கருப்பு மையால் அளித்தபடி தனது முகநூலில் பதிவிட்ட கும்பகோணம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisment

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். தமிழ் தேசிய குடியரசு கட்சியில் தலைவராக உள்ளார். வரும் மாதம் 15-ந் தேதி கும்பகோணத்தில் தமிழ்த் தேசிய குடியரசு கட்சியின் சார்பில் தமிழர் பாதுகாப்பு மற்றும் தமிழர் தாயக மீட்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் சிலம்பரசன் முகநூல் பக்கத்தில் இந்திய வரைபடத்தை பதிவிட்டு, அதில் "இந்தி இந்து இந்தியா மறுப்பு" "தமிழ் தமிழர் தமிழ்நாடு ஏற்போம்" என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய வரைபடத்தில் உள்ள தமிழக பகுதியை கருப்பு மையால் அளித்து, இந்திய வரைபடத்தில் தமிழகம் சங்கிலியால் கட்டப்பட்டது போன்ற வரைபடமும் பதிவிடப்பட்டுள்ளது.

இதனை கண்காணித்த சைபர் கிரைம் போலீசார் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு முகநூலில் சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட தமிழ் தேச குடியரசு கட்சி தலைவர் சிலம்பரசன் மீது இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

"ஏற்கனவே தாரசுரம் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவர் தேசிய கொடியை எரித்து அதன் வீடியோவை முகநூலில் பதிவிட்டு கைதாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.