Skip to main content

திருச்சியில் இதுவரை 6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு-மாவட்ட ஆட்சியர் தகவல்!

Published on 23/05/2021 | Edited on 23/05/2021
Black fungal disease detection in 6 persons so far in Trichy-District Collector Information

 

வெளிமாநிலங்களில் அதிகமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களில் விழுப்புரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பானது பரவ ஆரம்பித்துள்ளது.

 

தற்போது அவற்றின் தாக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பாதிப்படைய செய்து வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 6 பேர் இப்படிப்பட்ட கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

பெரும்பாலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கரோனா நோய் தாக்கம் ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு இந்த நோய் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பொதுமக்கள் ஊரடங்கு முழுமையாக பின்பற்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்