Advertisment

தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

Black flag struggle against Tamil Nadu Governor in Kattumannarkoil

காட்டுமன்னார்குடி வட்டம் மா. ஆதனூர் கிராமத்திற்கு நந்தனார் குருபூஜை நிகழ்ச்சிக்காகத்தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்தார். இவர் தமிழகத்தில் சனாதனத்தை ஆதரித்துப் பேசியதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புப் பட்டை அணிந்தும், கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

போராட்டத்திற்குக் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக் குழு உறுப்பினர்கள் இளங்கோவன், புகழேந்தி, வெற்றி வீரன், நகர அமைப்பாளர் மணிகண்டன், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், புஷ்பராஜ், முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் முருகவேல் மற்றும் தோழர்கள் நீலமேகன், ராஜேந்திரன், மணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

மாமேதை கார்ல் மார்க்ஸ், சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், நந்தனார் கொள்கைகளைத்திரித்து பொது மேடையில் சனாதன கொள்கைகளைப் பேசி வருவதாகவும்தமிழக மக்களுக்குத்தொடர்ந்து ஆளுநர் துரோகம் விளைவித்து வருவதாகவும்கண்டனக்கோஷங்களை எழுப்பினார்கள். இதில் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

kattumannaarkovil
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe