Advertisment

சிதம்பரம் வரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி; அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

n

சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், மல்லிகா, நகர் குழு உறுப்பினர்கள் சின்னையன், ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வி.எம் சேகர்.

Advertisment

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நகர செயலாளர் குமரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் குமார், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் சனாதான கொள்கையை உயர்த்தி பிடிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அனைத்து சமூக மக்களோடும் இணக்கமாகவும் அவர்களின் கல்வி உயர்வுக்காகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சகஜனந்தா அவர்களை களவாட முயற்சிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளை வழங்காத சனாதான சக்திகளின் குரலாக ஒலிக்கின்ற ஆளுநர் ஆ.என் ரவி, ஜன 27ம் தேதி சிதம்பரத்தில் நடைபெறும் அவரது பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருகை தருவதை அனைத்துக் கட்சிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆளுநரை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் 27-ஆம் தேதி இன்று காலை 10 மணிக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe