Skip to main content

புதிய மாவட்ட தொடக்க விழாவுக்கு வரும் முதல்வருக்கு கருப்பு கொடி...தொழிலாளர் சங்கம் அறிவிப்பு!!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பருவ கால தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என ஆலையை நிர்வகிக்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான 150 தொழிலாளர்கள் ஆலையை தொடர்ந்து சர்க்கரை உற்பத்தி செய்ய வேண்டும், தங்களது 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 21ந்தேதியோடு ஆறாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

black flag to be raised against Chief Minister


போராட்டத்தை கைவிட வேண்டுமென ஊழியர்களை ஆம்பூர் தாசில்தார் உட்பட அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களோ, இந்த சர்க்கரை ஆலைக்கு வரும் கரும்புகளை மற்ற ஆலைகளுக்கு அனுப்பிவிட்டு இந்த ஆலையை மூட வேண்டியதன் அவசியம் எதனால் வந்தது. அரசாங்கத்தோடு சேர்ந்து ஆலை நிர்வாகம் ஏதோ தவறு செய்கிறது, தொழிலாளர்களை ஏமாற்ற நினைக்கிறது. உடனே ஆலையை திறந்து உற்பத்தியை தொடங்க ஆணை வெளியிட வேண்டும் அதுவரை போராட்டம் செய்வோம் என்றுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது எனச்சொல்லி அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்.


அதேநேரத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முன்பாக அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை முதல் ஆலைக்கு வெளியே காவல்துறையின் 4 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆலைக்குள் புகுந்து தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்களோ என தொழிலாளர்கள்  பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மீண்டும் சர்க்கரை உற்பத்தி தொடங்காவிட்டால், வரும் 28ந்தேதி புதிய மாவட்டம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூர் நகருக்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் தேவதாஸ் அறிவிப்பு செய்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
10 acres of sugarcane burned and damaged near Srimushnam

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தில்10 ஏக்கர் கரும்பு எரிந்து  சாம்பலானது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், ராஜேசேகர் ஆகியோருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த கரும்பு வயலுக்கு அருகில் இருந்த நெல் வயலில் நெல் அறுவடை முடிந்து வைக்கோலை எரியூட்டியுள்ளனர். அப்போது பலமான காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக தீ கரும்பு வயலில் பரவியது. இதில் 10 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த கரும்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலான கரும்பின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கார்கள் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Car incident 3 people involved

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.