Advertisment

நெடுவாசலில் கருப்பு தினம் அனுசரிப்பு!

நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி மாலை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 16 ந் தேதி காலை நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். அடுத்தடுத்த நாட்களில் நெடுவாசல் சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சோந்த சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக் களம் நோக்கி வந்தனர். விவசாயிகளும், இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு வருவதைக் கண்ட அரசியல் கட்சிகளும், திரைத்துறையினரும் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டக் களம் நோக்கி வந்து ஆதரவாக பேசினார்கள்.

Advertisment

 Black day on neduvasal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு பறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினார்கள். இப்படி 196 நாட்கள் வரை நெடுவாசல் போராட்டம் நடந்தது. அதே போல வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களிலும் பல நாட்கள் போராட்டங்கள் நடந்தது. நெடுவாசலுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களுக்கு வழக்கு போடமாட்டாம் என்று சொன்ன காவல் துறை ஒரு வருடத்திற்கு பிறகு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பியது.

Advertisment

ஆனாலும் மத்திய மாநில அரசுகள் திட்டம் வராது என்று வாய்மொழியாக சொன்னாலும் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ மசோதா தாக்கல் செல்லவில்லை. கடந்த ஆண்டு நெடுவாசலுக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை அதனால் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஜெம் நிறுவனம் கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவு பெற்று நெடுவாசலுக்கு செல்வோம் என்பது போல கூறியுள்ளது. இதனால் நெடுவாசல்மக்கள் மேலும் கொதித்துப் போய் உள்ளனர்.

இந்த நிலையில் கஜா புயலும் அடியோடு புரட்டிப் போட்டுவிட்டு போய்விட்டது. இப்படி விவசாயிகள் மீது அடிமேல் அடி விழுவதால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர். வெளிநாடுகளில் வேலைக்கு சென்றுள்ள இளைஞர்கள் மீண்டும் விவசாயம் செய்ய சொந்த ஊர்களுக்கு வருகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கஜா புயல் தாக்கி விவசாயத்தை அழித்துவிட்டதால் அந்த எண்ணத்தை தற்காலிகமாக தள்ளிப் போட்டுள்ளனர்.

இந்தநிலையில் நெடுவாசல்போராட்டம் தொடங்கி 2 வருடம் முடீந்து 3 வது வருடம் தொடங்கும் நாளான பிப்ரவரி 16 ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்தனர் நெடுவாசல் மக்கள். நாடியம்மன் கோயில் திடலில் திரண்ட இளைஞர்கள் சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்! என்று முழக்கமிட்டனர்.

 Black day on neduvasal

போராட்டத்தின் தொடக்கத்தில் வெடிகுண்டுக்கு பலியான ராணுவ வீர்ர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தங்க கண்ணன்.. விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து விவசாயிகளை வெளியேற்ற திட்டமிட்டு ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தொடக்கத்திலேயே விவசாயிகள் வலுவாக எதிர்த்து போராடியதால் மத்திய, மாநில அரசுகள் சற்று பின்வாங்கியது. திட்டம் வராது என்று வாய்மொழியாக சொன்னார்கள். சொன்ன பிறகு ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து போட்டார்கள். அதனால் மறு போராட்டம் வெடித்தது. இப்படி மக்களை தினமும் போராட்டக் களத்திலேயே வைத்துக் கொண்டு அவர்களின் அன்றாட பணிகளை செய்யவிடாமல் செய்தனர். அதனால் காந்தி பிறந்த நாளில் அகிம்சை போராட்டத்தை தறகாலிகமாக கைவிட்டோம். ஆனால் எப்போது ஊருக்குள் நுழைய முயன்றாலும் உக்கிரமான போராட்டம் நடக்கும் என்பதையும் தெளிவு செய்துவிட்டோம். ஆனாலும் எங்கள் நிம்மதியை கெடுத்த இந்த நாளை எப்போதும் மறக்க மாட்டோம். அதனால் தான் பிப்ரவரி 16 ந் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்றார்.

protest Hydro carbon project neduvasal black day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe