
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் இரவு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தமிழக பாஜக வெளியிட்டிருந்த நிலையில் நேற்று பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் தற்பொழுது, பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், கோவை மாநகராட்சியின் 63 வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பெரம்பலூர், துவாக்குடி, லால்குடி, துறையூர் நகராட்சிக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல். மணப்பாறை, தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி நகராட்சிக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.