BJP's second phase candidate list released!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

Advertisment

அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. நேற்று இரவு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தமிழக பாஜக வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற தேர்தலில் பாஜக சார்பில் தாம்பரம், ஆவடி, கும்பகோணம், கோவை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல் திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, காஞ்சிபுரம், சென்னை, கரூர் மாநகராட்சிகளிலும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

Advertisment