Advertisment

சரவணனை கைது செய்யக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க.வினர் மனு

Advertisment

BJP's Petition to Metropolitan Police Commissioner to Arrest Saravanan!

மதுரையில் தமிழக நிதியமைச்சர் காரில் காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

கடந்த ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று மதுரை சர்வதேச விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பா.ஜ.க.வின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், மாண்பை மீறி நிதியமைச்சரின் காரின் மீது காலணி வீச டாக்டர் சரவணன் தூண்டுதலாக இருந்ததாகவும், அவரை கைது செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leader madurai police saravanan
இதையும் படியுங்கள்
Subscribe