Advertisment

கோவையில் பாஜக தோல்வி; சவால் விட்ட பாஜக நிர்வாகி மொட்டை

BJP's defeat in Coimbatore; The challenged BJP executive is bald

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின்தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத்தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கோவையில் பாஜக வெற்றி பெறும் என மாற்றுக் கட்சி நபர்களிடம் பந்தயம் கட்டிய நிலையில், ஒருவேளை பாஜக கோவையில் தோற்றுவிட்டால் அனைவர் முன்னிலையிலும் பஜாரில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டிருந்தார். இந்நிலையில் கோவையில் பாஜக தோல்வியைத்தழுவிய நிலையில் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் தூத்துக்குடியின் பரபரப்பான சாலையின் ரவுண்டான அருகில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் போட்டியிட்டஅனைத்து தொகுதியிலும் பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Election kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe