Advertisment

திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

BJPians involved in road blockade in Trichy

தஞ்சாவூரில் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், திருக்காட்டுப்பள்ளியில் மதமாற்றம் செய்யப்பட்ட சிறுமி இறந்ததற்குக் கண்டனம் தெரிவித்தும்திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் பாஜகவினர்சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் படுகொலைக்கு நியாயம் கேட்டு தஞ்சாவூரில் போராடிய இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதில் விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் கைது செய்யப்பட்டார்.

Advertisment

திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை மற்றும் திமுக அரசைக் கண்டித்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, போலீசார் அவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் திருச்சி-சென்னை புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe