அரசு அலுவலகங்களில் மாநில முதல்வர்களின்படம் வைத்திருப்பதுபோல பாரத பிரதமர் மோடியின் படத்தையும் வைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் சமீப காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.கநிர்வாகிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், புதன் கிழமை திரண்ட பா.ஜ.க.வினர் பிரதமர் மோடி படத்துடன் அரசு அலுவகம் நோக்கிச் சென்றனர். தொடர்ந்து சாலை மறியலும் செய்தனர்.