Advertisment

300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு; 100 பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

BJP workers arrested for struggle in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் எனவும் தமிழக அரசின் செயல்பாடு மெத்தனப் போக்கே காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், கஞ்சா சாராயம் போன்ற போதைப்பொருட்களின் ஊடுருவல்அதிகமாக இருப்பதாகவும் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயத்தால் பலியானவர்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காரில் வந்தவர்களை மறித்து போலீசார் பாஜக நிர்வாகிகளை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் குண்டு கட்டாக கைது செய்து மண்டபத்தில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வேனியல் ஏற்றி அனுப்பினர். பாதுகாப்பு பணிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு ஏடிஎஸ்பி மற்றும் இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe