Advertisment

11 இடங்களில் சாலை மறியல் செய்த பாஜகவினர் கைது!

bjp

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குமாரசாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா, கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, அமைச்சர்கள் தேரை இழுக்க, அங்கிருந்த பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வினர், வாக்குவாதம் செய்ததால், பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

bjp

தேரை வடம் பிடித்து அமைச்சர்கள் இழுத்ததை எதிர்த்தும், பாஜக நிர்வாகிகளைகைது செய்ததை எதிர்த்தும் பாஜகவினர் குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட11 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertisment

Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe