பெண்களை குறித்து வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இழிவாக பேசியதாக கூறி பா.ஜ.க.வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில் இன்று பா.ஜ.க. மகளிரணி சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபோராட்டத்தின்போது வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்யவேண்டும் என கோஷங்களையும் எழுப்பினர்.
இப்போராட்டத்தில், நடிகைகள் கௌதமி, காயத்ரி ரகுராமன், ஜெயலட்சுமி உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் போரட்டத்தின்போது, திருமாவளவனின் உருவ பொம்பை எரிக்கப்பட்டது.