publive-image

Advertisment

ராகுல் காந்தியின் நடைபயணம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகரில் தனது கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ராகுல் காந்தியின் நடைபயணம் நாட்டில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவருடைய உடம்பிற்கு தான் இழப்பு ஏற்படும். நாளை கடத்தவும், பாராளுமன்ற தேர்தலுக்காகவும் இந்த நடை பயணத்தை மேற்கொள்கிறார். காங்கிரசில் எந்த வேலையும் எந்த மாநிலத்திலும் நடைபெற வாய்ப்பே இல்லை. எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை. எனவே நடைபயணத்தை ஒரு காரணமாக வைத்து ஏற்பாடு செய்கிறார். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்." என கூறினார்.

சிலதினங்கள் முன் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்தினர் "அதிமுக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இயக்கம். ஒரு காலத்தில் நான் அதிமுகவில் இருந்தவன் என்பதால் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்" என தெரிவித்திருந்தார். இதற்கு முன் 2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தும் குறிப்பிடத்தக்கது.