'BJP will not win in any constituency' - Subramanian Swamy

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில், பாரதிய ஜனதாவுக்கு20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாகஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.நேற்று (09.03.2021) இரவு விடிய விடியநடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பதிலளித்துள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'தேசிய கட்சியான பாஜக, வெற்றியோ தோல்வியோ தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெல்லும். இல்லாவிடில் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது' என்றார்.